சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்டக்காரருமான அலைஸ்டர் குக், தமது விருப்பத்திற்குரிய  11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளார். 

இந்தியாவுடனான ஐந்து போட்டிகளில் கொண்ட இறுதி டெஸ்ட் போட்டித் தொடருடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக குக் அண்மையில் அறிவத்தார்.

ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், இருபதுக்கு 20 போட்டிகளிலும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தனது ஓய்வு அறிவிப்பின் மூலம் அவர் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந் நிலையில் அலைஸ்டர் குக், தமது விருப்பத்திற்குரிய  11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளார்.

குக்கின் இந்த 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இந்திய அணியைச் சேர்ந்த யாரும் உள்ளடக்கப்படவில்லை. 

அதன்படி தமது அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக இங்கிலாந்தின் கிரஹாம் கூச் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெத்தியூ ஹேய்டன் ஆகியோர்களது பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்திய வரிசை துடுப்பாட்டக்காரர்களாக பிரேய்ன் லாரா, ரிக்கி பொன்டீங், ஏ.பி.டி.வில்லியர்ஸ், குமார் சங்கக்கார மற்றும் ஜக் கலீஸ் ஆகியோர்களையும் பந்து வீச்சில் முத்தையா முரளிதரன், ஷேன் வோன், கிளேன் மெக்ராத் மற்றும் அண்டர்சன் ஆகியோரை பந்து வீச்சாளர்களாகவும் இணைத்துக் கொண்டுள்ளார்.