கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள "மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணி"யின் பிரதான கூட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த எதிர்ப்பு பேரணியில் பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டு எதிரக்கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது