கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியால் சட்டமொழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாததை உறுதி செய்வதற்கு  பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவோம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அமைதிப்பேரணியை தடுக்கும் நோக்கம் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன சட்டம் ஒழுங்கை பேணுவதற்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

காடையர் கும்பல் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள அலுவலகங்கள் கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் பொலிஸாருக்கு அவர்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது,பொதுமக்களிற்கு குழப்பம் விளைவித்தால் உரிய கடும் நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.