கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட  பேரணி காரணமாக விசேட நீதிமன்றத்திற்கும், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் மேலம் தெரிவிக்கையில்,

"விசேட நீதிமன்றத்திற்குள்ளும், விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கு காடையர் கும்பலொன்று திட்டமிட்டுள்ளது. 

மிக முக்கியமான இடங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் விசேட நீதிமன்றத்தில்உள்ள ஆவணங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

பொது எதிரணியுடன் தொடர்புடைய பலர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதும் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுவதும்  பொதுமக்களிற்கு தெரியும்,

சட்டஒழுங்கை பேணுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்." என  குறிப்பிட்டுள்ளார்.