யாழ்ப்பாணம், நல்லூர் கந்தனி வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி நாளிதழ் தனது வாசகர்களுக்கு இலவசமாக சிறப்பிதழ் ஒன்றை வழங்கவுள்ளது.

நல்லூர் கந்தனின் இரத உற்சவம் இடம்பெறும் தினமான செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமைவெளிவரும் வீரகேசரி நாளிதழுடன் குறித்த நல்லூர்  சிறப்பிதழ் இலவசமாக வெளிவரவுள்ளது.

வீரகேசரியின் அபிமான வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை வெளிப்படுத்தும் வகையில், லங்கபே ( Lanka Pay ) யும் இணைந்து பெறுமதியான பரிசொன்றை வழங்கவுள்ளது.

எனவே முயற்சித்தால் நீங்களும் முருகனின் திருவுருவம் பதித்த ரூபா 2 இலட்சம் மதிப்புள்ள 22 கரட் தங்க நாணயங்களை வெல்லும் 6 அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக முடியும்.

நீங்களும் அதிர்ஷ்டசாலிகளாக விரும்பினால் செய்ய வேண்டியது இது தான்,

எதிர்வரும் 8 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை வெளியாகும் வீரகேசரி நாளிதழுடன் வெளியாகும் நல்லூர்  சிறப்பிதழை வாசித்து, அதில் காணப்படும் கூப்பனை நிரப்பி லங்கபே ( Lanka Pay ) வழங்கும் முருகனின் திருவுருவம் பதித்த ரூபா 2 இலட்சம் பெறுமதியான 22 கரட் மதிப்புடைய 6 தங்க நாணயங்களை வென்றிடும் அதிர்ஷ்டசாலியாகிடுங்கள்.