ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான உறுப்பு கர்ப்பப்பை. ஒரு பெண் ஓர் ஆரோக்கியமான தாயாக வேண்டுமானால் கர்ப்பப்பை நன்றாக இருத்தல் வேண்டும்.

இதில் முக்கியமான பகுதி கரு குழாய் (FallopianTube) கரு குழாயில் ஏன் பிரச்சினை ஏற்படுகின்றது அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கரு குழாயில் எவ்வாறு பிரச்சினை ஏற்படுகின்றது என்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிலர் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்கின்றனர். இவ்வாறு செய்யும் போது கர்ப்பப்பைக்கும் செல்லும் உயிரணுக்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்கின்றார்கள் இது ஒரு பெரியதொரு பிரச்சினை. உதாரணமாக கணவன் இறந்து மறுமணம் செய்து கொள்பவர்கள் , குழந்தை தவறியவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்திருந்தால் இவ்வாறான பாதிப்பை எதிர்நோக்க வேண்டி வரும்.

01. கரு குழாயில் கரு உருவாகி அப்பகுதி நமக்கு தெரியாமலேயே வெடித்து இருக்கலாம் இந்நிலையில் மீண்டும் கருத்தரிப்பு இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகின்றது. 03. கரு குழாயில் ஏதாவது ஒரு தொற்று ஏற்படலாம். கணவன் - மனைவி ஒன்றிணையும்போது யாராவது ஒருவர் மூலம் தொற்று எற்படலாம். இவ்வாறான பிரச்சினைகளின் அறிகுறிகளாக அடிவயிறு வலி, வௌ்ளைப்படுதல், ஆண் உறுப்பில் அரிப்பு ஏற்படும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணவன் - மனைவியும் அவதானமாக செயற்பட வேண்டும்.

முக்கியமாக கூறப்போனால் குறிப்பிட்ட அந்த அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது இருபாலாரினதும் பொறுப்பாகும். குறிப்பிட்ட அப்பகுதியில் போதிய சுத்தமின்மையினால் sexually transmitted diseases எனும் நோய் ஏற்படுகின்றது. இருவர் ஒன்றிணையும் போது ஆணின் விந்து வழியாகவோ அல்லது பெண்ணினூடாகவோ இந்த நோய் தொற்று ஏற்படலாம். இவ்வாறான தொற்று ஏற்படும் போது அது கரு குழாயினூடாக கர்ப்பப்பைக்கு சென்று விடுகின்றது. இவ்வாறு கர்ப்பப்பையில் தொற்று (கிருமி தாக்கம்) ஏற்பட்டு விட்டால் நீர்கோர்ப்பு ஏற்படும். இவ்வாறான நிலையில் கரு குழாயில் அடைப்பு ஏற்பட்டு விடும். இவ்வாறான செயற்பாடுகள் கரு குழாய் அடைப்புக்கு பிரதான காரணமாக அமைந்து விடுகின்றது. கரு குழாயில் அடைப்பு இருப்பது பற்றி Laparoscopy Test மூலமாக தெரிதுக்கொள்ளலாம். இவ்வாறான test செய்த பின்னர் குறிப்பிட்ட அந்த ட்யூப் பகுதியை சுத்தம் செய்ய முடியுமானால் இயற்கையாகவே குழந்தையை உருவாக்கச் செய்வதற்கான வழிவகைகளை செய்யலாம். அவ்வாறு முடியாது போகும் பட்சத்தில் test tube மூலம் குழந்தையைபெற்றுக்கொள்ள முடியும். கரு குழாயில் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு உரிய முறையில் சிகிச்சை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் பிள்ளைப்பேறு கிடைக்காமல் போகும் என்றுநினைத்து கவலைப்பட வேண்டி அவசியமில்லை. ஏனெனில் இந்நவீன சிகிச்சை முறையில் அதற்கான சிறந்த வழி முறை இருக்கின்றது.