இந்தியா பாக்கிஸ்தானுடன் இருநாடுகள் மாத்திரம் பங்குகொள்ளும் தொடர்களில் விளையாட மறுப்பது குறித்த விடயத்தை தொடர்ந்தும் ஐ.சி.சியின் கவனத்திற்கு கொண்டுவரப்போவதாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் புதிய தலைவர் ஈசான் மனி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு முரணாக உள்ளது அவர்கள் சர்வதேச தொடர்களில் பாக்கிஸ்தானுடன் விளையாட தயாராக உள்ளனர் எனினும் இரு தரப்பு தொடர்களில் விளையாட மறுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாக்கிஸ்தான் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒக்டோபரில் ஐ.சி.சி அதிகாரிகள் முன்னிலையில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே ஈசான் மணி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை ஆரம்பகட்டத்திலிருந்தால் நான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பேன் ஆனால் பிரச்சினை நீண்ட தூரம் போய்விட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் காரணங்கள் காரணமாக இந்தியா பாக்கிஸ்தானுடன் இரு தொடர்களை இரத்துச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.