சிரியா நாட்டிலுள்ள ஈரான் இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய படையினர் நடத்திய வான் வழி ஏவுகணை தாக்குதல்களை நடுவானில் பதில் தாக்குதல் நடத்தி இடமறித்து அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிரியாவின் டார்டோஸ் மற்றும் ஹாமா பகுதிகிலுள்ள ஈரான் நாட்டுக்கு சொந்தமான இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்தது.

இதையடுத்து சிரிய இராணுவம் ஐந்து ஏவுகணைகளை நடுவானிலேயே எதிர் தாக்குதலை நடத்தி இடமறித்து அழித்துள்ளது. எனினும் ஹாமா பகுதியல் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே இரண்டு ஏவுகணைகள் வெடித்துள்ளது.

இந்த தாக்குதலினால் மூன்று இராணுவ வீரர்கள் பலியானதாகவும், மேலும், ஈரானை சேர்ந்த 9 வீரர்களும் சிரியாவை சேர்ந்த 14 இராணுவ  வீரர்கள் என மொத்தம் 23 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என இஸ்ரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான சிரிய கண்காணிப்புக் கருத்தின்படி, லெபனிய வான்வெளி வழியாக இஸ்ரேலிய படையினர் நுழைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.