தமிழகத்தில் பினாமி அ.தி.மு.க அரசு இருக்கிறது என்ற தைரியத்தில் அராஜக செயல்களில் பா.ஜ.க ஈடுபடுகிமை கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது..

‘கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் தங்களின் பினாமி அ.தி.மு.க அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பா.ஜ.க செயல்படுவது கண்டிக்கத்தக்கது. 

உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று, அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பா.ஜ.கவுக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதாகி பின்னர் பிணையில் வெளிவந்த மாணவி சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.