(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவருக்கு மாதாந்த கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், அலுவலக உறுப்பினர்களுக்கு 75 ஆயிரம் ரூபாவும் வழங்க பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

 

இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஆராயவும், அவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமால் ஆகப்பட்டோர் குறித்து கண்டறியும் அலுவலகத்திற்கு தலைவர் உள்ளிட்ட எழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவும் ஆராயப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தலைவருக்கு ஒரு இலட்சம் ரூபாவும், மாதாந்த தொலைபேசி கட்டணமாக பத்தாயிரம் ரூபாவும், மாதாந்தம் 225 லீட்டர் எரிபொருள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றையும் வழங்கவும்  ஏனைய உறுப்பினர்களுக்கு 75 ஆயிரம் ரூபாவும், மாதாந்த தொலைபேசி கட்டணமாக எட்டாயிரம் ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இதனை அங்கீகரிக்க வேண்டும் என இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.