சிரியாவில் இலக்குவைக்கப்படவேண்டிய இரசாயன ஆயுதநிலைகள் குறித்த பட்டியலொன்றை அமெரிக்காவின் புலனாய்வாளர்களும் படையினரும் தயாரித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் உத்தரவிடும் பட்சத்தில் உடனடியாக தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டிய இலக்குகளின் பட்டியலையே அமெரிக்க அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

சிரியாவின் இரசாய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனினும் சிரியா அவ்வாறான தாக்குதலொன்றை மேற்கொண்டால் அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது என சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிழக்கு மத்திய தரைகடலில் ரஸ்யா கடற்படை கலங்களின் பாரிய நடமாட்டத்தை அவதானித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா பாரிய கடல் ஒத்திகைக்காக 26 போர்க்கப்பல்களையும் 30 தாக்குதல் விமானங்களையும் பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றது.

இதேவேளை சிரிய அரசாங்கம் இரசாயன தாக்குதல்களை மேற்கொண்டால் அதற்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்வதை தடுப்பதற்காக ரஸ்யா இவற்றை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர்.