அமெரிக்கன் கோர்னர் அங்குரார்ப்பணத்தின் நிமித்தம் மாத்தறை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் அமெரிக்கத் தூதரகம் இணைந்து கொண்டுள்ளது.
மாத்தறையில் புதிய அமெரிக்கன் கோர்னர் ஒன்றைத் திறப்பது தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்துக்கும் மாத்தறை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் இடையில் ஒகஸ்ட் 30ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
அமெரிக்கத் தூதரகத்தின் பதில் பொது அலுவல்கள் அதிகாரி நேன்ஸி வென்ஹோர்ன் மற்றும் சம்மேளனத்தின் தலைவர் மேத்தா விதானகமாச்சி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இல.149 ஹக்மன வீதி மாத்தறை என்ற முகவரியில் உள்ள மாத்தறை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன கட்டடத்தின் கீழ் மாடியில் அமைந்துள்ள அமெரிக்கன் கோர்னர் தென் மாகாணத்தின் உள்ளவர்களுக்கு இலவச திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கும்.
ஆங்கில வகுப்புக்கள் குறியிட்டு முறை மற்றும் கணனி திறன் தலைமைத்துவம் மற்றும் பொது பேச்சுப் பயிற்சிகள் பல்வேறான படங்களை திரையிடுதல் மற்றும் கலாசார சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இதன் செயற்றிட்டங்கள் அமைந்திருக்கும்.
“தென் மாகாண மக்களுடன் எமது உறகளைக் கட்டியெழுப்புவதற்கான அமெரிக்க தூதரகத்தின் உறுதிப்பாட்டை இப் புதிய அமெரிக்கன் கோர்னர் பிரிதிநிதித்துவப்படுகிறது”
எமது இலவச திட்டங்கள் இந்த பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புக்களை விஸ்தரிப்பதுடன் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளையும் வலுப்படுத்தும்” என்று வென்ஹோர்ன் தெரிவித்தார்.
பல்வேறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்த அதே போல் வெவ்வேறு வயதுடைய மக்களை கவர்ந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் மையத்தின் (iHub) 2018 மார்ச் மாத அங்குரார்ப்பண வெற்றியின் தொடர்ச்சியாகவே அமெரிக்கன் கோனரின் பிரவேசமும் அமைந்துள்ளது.
தற்போதைய நிகழ்ச்சி திட்டங்களானது பொதுப் பேச்சு மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
எதிர் வரும் மாதங்களில் புதிய அமெரிக்கன் கோர்னர் திறக்கப்படும் வரை iHub தொடர்ந்தும் செயற்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM