(லியோ நிரோஷ தர்ஷன்)

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அமெரிக்கவிற்கு செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க செல்லும் ஜனாதிபதி  மைத்திரிப்பால சிறிசேன இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்திக்க உள்ளார். அத்துடன் அமரிக்கா வாழ் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.