அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் நிதியுதவியில் மன்னார் பொலிஸ் நிலைய விளையாட்டு வீரர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான உதான மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்டப் பணிப்பாளர் என்.எம். முனவ்வர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இவ்வாறான சேவைகளைத் தொடர்ந்து செய்யும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் றிப்கான் பதியுதீன் ஆகியோருக்கு மன்னார் பொலிஸ் நிலையம் சார்பில் அதிகாரிகள் நன்றியைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.