புதிய தேர்தல்  முறைமையை கொண்டுவர பைஸர் முஸ்தபா முயற்சிப்பாரேயானால் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்த சிறுபான்மை மக்கள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் மூலம்  அமைச்சுப்  பதவிபெற்ற பைஸர் முஸ்தபா ஜனநாயகத் தேர்தல் முறைமை குறித்துப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

மேலும் தோல்வியுற்ற எல்லை நிர்ணய அறிக்கைக்கு  மீண்டும் விளக்கமளித்து அதனை நியாயப்படுத்தி, மாகாண சபைத் தேர்தல்களை  பிற்போடுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.