ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியின் தீர்மானமிக்க இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. 

ஆசிய வலைப்­பந்­தாட்டத் தொடரில் முதல் இரண்டு போட்­டி­க­ளிலும் அபா­ர வெற்­றி­களைப் பதி­வு­செய்து தனது பிரிவில் முத­லி­டத்தைப்பிடித்து இலங்கை அணி.

சிங்­கப்­பூரில் நடை­பெற்­று­வரும் இந்தத் தொடரில் இலங்கை அணி முதல்­நாளில் சைனிஸ் தாய்­பேவை 137 – 5 என்ற புள்­ளிகள் கணக்­கிலும், இந்­தி­யாவை 101 – 29 என்ற அடிப்­ப­டை­யிலும் வீழ்த்தி இரண்­டா­வது சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

இந்­நி­லையில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இரண்­டா­வது சுற்றுப் போட்­டியில் இலங்கை அணி தொடரை நடத்தும் சிங்­கப்பூர் அணி­யு­டனும் மலே­ஷியா மற்றும் ஹொங்கொங் அணி­யையும் எதிர்த்­தா­ட­வுள்­ளது. 

இரண்டாம் சுற்றுக்கான போட்­டிகள் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழ­மை­ வரை நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.