இந்தியாவின் மும்பையில் ஓடும் மின்சார ரயிலின் படிகட்டில் நின்றபடி இளம் பெண் செய்த விபரீத சாகசம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தற்போது இளைஞர்கள் சாகசம் செய்வதிலும், உயிரை துச்சமென எண்ணி, சில அசாத்திய காரியங்களில் ஈடுபடுவதும் இப்போது வழக்கமான ஒன்றாகி விட்டது. 

அதுவும், மின்சார ரயில்களில் படிகட்டில் தொங்கியபடி செய்யும் விபரீத சாகசங்கள் காண்போரை அச்சத்தில் ஆழ்த்துகிறது. சில சமயங்களில் அதனால் ஏற்படும் மிகப்பெரிய பின்விளைவுகள் சாகசம் செய்வோரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

ஆண்கள் மட்டும்தான் இதுபோன்ற வீண் சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பெண்களும் தற்போது இதுபோன்றவற்றில் களமிறங்கிவிட்டனர். 

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து துறைமுகம் வரை இயக்கப்படும் மின்சார ரயிலில் ரே சாலை ரயில் நிறுத்தத்தில் இருந்து காட்டன் கிரீன் ரயில் நிலையம் வரை ஒரு இளம் பெண் செய்த சாகசம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ரே சாலை ரயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் ஏறிய குறித்த இளம் பெண், காட்டன் கிரீன் நிலையம் வரும் வரை படிகட்டில் தொங்கியபடி, கடந்துசெல்லும் ரயில்வே தடுப்புகளை தொடும் மிக மோசமான முயற்சியில், மிக உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். 

இதனை அந்த ரயிலியில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது தொலைபேசி மூலம் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவை கண்ட ரயில்வே பொலிஸார் வீடியோவின் அடிப்படையில் குறித்த பெண்ணை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.