(இரோஷா வேலு) 

சிறையிலுள்ள பெண்கைதிகளுக்கு அவசியமான சுகாதார, போஷாக்கு மற்றும் சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி வெலிகட சிறைச்சலைக்கு முன்பாக விடுதலை இயக்கத்தினர் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை இயக்கத்தினர், சிறைக்குள் தமது அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்போரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி ஒதுக்கியுள்ள அரசாங்கம், சிறைச்சாலை சுவர்களில் மாத்திரம் சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்ற வாசகத்தை பொறித்துள்ளது எனவும் தெரிவித்தனர். 

மேலும் பெண்ணொருவர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராகவிருந்தும் அவருக்கு சிறைக்குள் உள்ள பெண் கைதிகளின் சுகாதார தேவை குறித்து புரியவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.