சோமாலியாவில் அரசு அலுவலகம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹாவ்லே வாடாக் எனும் மாவட்டத்தின்  தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது நேற்று காரின் மூலம் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததோடு 6 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில் குறித்த கார் குண்டு தாக்குதலில் அருகிலிருந்த ஒரு பாடசாலைக் கட்டடம் இடிந்து தரைமட்டமானதோடு ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

இதனையடுதது கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.