அரசாங்கத்திற்கு எதிராக நாளை மறுதினம் கொழும்பில் நடத்தவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணி குறித்த தீர்க்கமான முடிவுகள் நாளை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலின் போது அறிவிக்கப்படவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் அத்தீர்மானங்கள் கிராமிய மட்டத்திலுள்ள பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.