(ஆர்.விதுஷா)

புத்தளம், ஆராச்சிக்குட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய தணபிம பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புத்தளம்  விசேட பொலிஸ் முற்றுகைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் ததகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 65 வயதையுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அத்துடன் இந்த சுற்றிவளைப்பின் போது 75 போத்தல்களிலிருந்து 56 லீட்டர் மாதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.