வெளிநாட்டு நாணையத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கடத்த  முயற்சித்த ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

அத்துடன் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நணயத்தாள்களுள் யூரோ, டென்மார்க் குரோனர், சவுதி ரியால்  மற்றும் கட்டார் ரியால் என்பவை உள்ளடங்குவதாகவும் அவற்றின் பெறுமதி இலங்கை ரூபாவில் 28 மில்லியன் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.