பங்­க­ளாதேஷ் கிரிக்கட் அணியின்  துடுப்­பாட்ட வீரர் சபீர் ரஹ்­மா­னுக்கு 6 மாத கால சர்­வ­தேச கிரிக்கட் தடை விதித்து அந் நாட்டு கிரிக்கட் சபை அறி­வித்­துள்­ளது.

சமூக வலைத்­தளம் ஊடாக ரசி­கர்­களை அவ­ம­திக்கும் வண்ணம் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக கூறி, அவ­ருக்கு எதி­ரான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­யா­கவே இந்த 6 மாத கால சர்­வ­தேச கிரிக்கட் தடை விதிக்­கப்பட்­டுள்­ளது.  அதன்படி அடுத்து 6 மாதங்­க­ளுக்கு சபீர் ரஹ்­மானால் சர்­வ­தேச கிரிக்கட் போட்­டிகள் எதிலும் பங்­கேற்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

சபீர் ரஹ்மான் பங்­க­ளாதேஷ் சார்பில் 11 டெஸ்ட் போட்­டி­க­ளிலும், 54 ஒரு நாள் போட்­டி­க­ளிலும் 41 T20 போட்­டி­க­ளிலும் பங்­கேற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.