(இந்­தோ­னே­ஸி­யா­வி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்)

விளை­யாட்டு உல­கிலும் வல்­ல­ரசு தான் என்­பதை சீனா நிரூ­பித்து ஒட்­டு­மொத்­த­மாக 289 பதக்­கங்­களை வென்று முத­லிடம் பிடிக்க நேற்­றுடன் நிறை­வு­பெற்­றது 18 ஆவது ஆசிய விளை­யாட்டு விழா.

இந்­தோ­னே­ஸிய தலை­நகர் ஜகர்த்தா மற்றும் பலம்­பெங்கில் கடந்த 18 ஆம் திகதி ஆரம்­ப­மான 18 ஆவது ஆசிய விளை­யாட்டு விழாவில் மொத்தம் 45 ஆசிய நாடுகள் பங்­கேற்­றி­ருந்­தன. இதில் 11300 வீர வீராங்­க­னைகள் கலந்­து­கொண்டு 40 விளை­யாட்­டுக்­களின் 465 போட்டிப் பிரி­வு­களில் போட்­டி­யிட்­டனர்.

வர­லாற்றில் முதல் முறை­யாக இம்­முறை ஆசிய விளை­யாட்டு விழாவில் இலங்­கை­யி­லி­ருந்து 28 விளை­யாட்டு பிரி­வு­களில் 173 வீர வீராங்­க­னைகள் கலந்­து­கொண்­டனர். பெரும் பொருட்­செ­லவில் இந்­தோ­னேஸி­யா­வுக்கு அனுப்பி­வைக்­கப்­பட்ட இலங்கை வீரர்­களால் ஒரு பதக்­கத்­தைக்­கூட வெல்ல முடி­யாமல் போய்­விட்­டது. இத்­த­னைக்கும் யுத்த பூமி­களான சிரி­யா, ஆப்­கா­னிஸ்­தான், ஈராக் கூட ஒரு­சில பதக்­கங்­களை வென்று சாதித்­தன. 

ஒரு­சில போட்­டி­களில் இலங்கை அணி இறு­தியை எட்­டி­யி­ருந்­தாலும் சீனா, ஜப்பான் ,இந்­தி­யா­வுடன் போட்­டி­யிட்டு இலங்­கையால் வெல்ல முடி­ய­வில்லை. இதற்கு ஒட்­டு­மொத்­த­மாக வீரர்­க­ளையும் குறை­கூற முடி­யாது. இலங்­கையில் உள்ள வச­தி­கள், பயிற்­சி­களின் பற்­றாக்­கு­றை, விளை­யாட்டில் விளை­யாடும் அர­சியல் போன்றவை பெரு­ம­ளவு தாக்­கத்தை செலுத்­தத்தான் செய்­கின்­றன.

இலங்கை அணி 1982ஆம் ஆண்டு டெல்­லியிலும் 1986ஆம் ஆண்டு சியோ­லி­லும் 2010ஆம் ஆண்டு குஹாங்­கு­சுவிலும் நடை­பெற்ற ஆசிய விளை­யாட்டு போட்டிகளில்  எவ்­வித பதக்­கத்தையும் வெல்­லாமல் நாடு திரும்­பி­யிருந்தது. அதேபோல் இவ் ஆண்டு ஆசிய விளையாட்டு விழா­விலும் 173 வீரர்­களும் வெறுங்­கை­யுடன் நாடு திரும்­பு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்­தி­வரும் சீனா இம்­முறை 132 தங்­கம், 92 வெள்ளி, 65 வெண்­க­­லம் என ஒட்­டு­மொத்­த­மாக 289 பத­க்கங்­களை வென்று முத­லி­டத்தைப் பிடித்தது. அதேபோல் ஜப்பான் 74 தங்­க­ பதக்கங்களுடன் இரண்­டா­மி­டத்­தி­லும் 49 தங்­க பதக்கங்­க­ளுடன் கொரியா மூன்­றா­மி­டத்­தையும் பெற்­றன. ஆசிய அரங்கில் 15 தங்­கம், 24 வெள்­ளி, 30 வெண்­க­லம் என 69 பதக்­கங்­களை வென்று இந்­தியா 8 ஆவது இடத்தைப் பிடித்­தது. 

மெய்­வல்­லுநர் போட்­டி­களைப் பொறுத்­த­வ­ரை ஆசிய வீரர்களை விட ஆபி­ரிக்க நாட்டு வீரர்­களின் ஆதிக்­கமே அதி­க­மாக இருந்­தது. காரணம் கட்டார், பஹ்ரைன் போன்ற நாடுகள் ஆபி­ரிக்க வீரர்­களை இறக்­கு­மதி செய்து தங்கள் நாட்டுக் கொடியின் கீழ் தங்கள் நாட்டு வீரர்­களைப் போல் கள­மி­றக்கி பதக்­கங்­களை வென்­றன. பஹ்­ரைனில் பதக்கம் வென்ற 19 வீரர்கள் ஆபி­ரிக்க நாட்­ட­வர்கள். ஆனாலும் இது சட்­டப்­படி கள­மி­றக்­கப்­ப­டு­வதால் எந்த தவறும் கிடை­யாது. ஆனாலும் ஆசிய விளை­யாட்டா அல்­லது ஆபி­ரிக்க விளை­யாட்டா என்ற சந்­தேகம் எமக்கு எழுந்­தது.

இலங்கை வீரர்கள் ஒட்­டு­மொத்­த­மாக குறை­கூறும் அள­விற்கும் இல்லை. திற­மை­யாக போட்­டி­யி­டு­கி­றார்கள். ஆனால் வெற்­றி­பெ­று­வ­தற்­கான நுணுக்­கங்கள் அவர்­க­ளிடம் இல்லை என்­ப­தையே எம்மால் காண­மு­டிந்­தது. உதா­ர­ணத்­திற்கு நேற்று நடை­பெற்ற றக்பி செவன்ஸ் அரை­யி­று­தியில் இலங்கை அணி ஜப்­பா­னிடம் 12-–10 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வீழ்ந்­தது. ஆரம்­பத்தில் இந்தப் போட்­டியில் இலங்கை அணி சவா­லாக விளங்­கி­னாலும் இறுதிக் கட்­டத்தில் ஆட்டம் கைந­ழு­விப்­போ­னது. றக்­பி­யி­லா­வது இலங்­கைக்கு பதக்கம் ஒன்றை வெற்­றி­கொள்ள முடிந்த சந்­தர்ப்­பம் நழு­வ­வி­டப்­பட்­டது.

மெய்­வல்­லு­நரில் இறு­தி­யாக நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 4x400 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இலங்கை அணி நான்­கா­வது இடம் பிடித்து பதக்­கத்தை தவ­ற­விட்­டி­ருந்­தது. அதேபோல் பல போட்­டி­களில் இறுதிக் கட்­டத்தை நெருங்கி பதக்­கத்தை நழு­வ­விட்ட சந்­தர்ப்­ப­ங்கள் ஏராளம்.

ஆசிய விளை­யாட்டு விழாவை இந்­தோ­னே­ஸியா சிறப்­பா­கவே நடத்தி முடித்­தி­ருக்­கி­றது. உலக அளவில் விளை­யாட்டின் மூலம் இந்­தோ­னே­ஸி­யா­வுக்கு புதிய வெளிச்சம் விழுந்­தி­ருக்­கின்­றது எனலாம். காரணம் பண­வீக்கம் அதி­க­மாக உள்ள நாடு­களில் இந்­தோ­னே­ஸி­யாவும் ஒன்று. நம் நாட்டின் ஒரு ரூபாய் இந்­தோ­னே­ஸிய மதிப்பில் 92 ரூபியா. 

இங்கு 1 இலட்சம் நோட்­டுதான் அனைத்­திற்கும். அப்­ப­டி­யி­ருக்க பெரும் பொருட்செலவில் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவை நடத்தி பெரும் பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவை சீனா நடத்துகின்றது. சீனாவின் பெரும் நகரங்களில் ஒன்றான ஹாங்சுவில் இந்தத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு வெறுங்கையுடன் நாடு திரும்பிய இலங்கை அணி அடுத்த ஆசிய விளையாட்டிலாவது பதக்கம் வென்று சாதிக்குமா என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.