ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 67 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவர் 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கம்பஹா யாகொடையில் பிறந்தார்.
தோபவெவ மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை ரோயல் கல்லூரிகளில் கல்வி கற்ற அவர் கம்யூனிட்ஸ் கட்சியில் தனது அரசியல் பணிகளை தொடர்ந்தார். பிற்பட்ட காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
அதன்பின்னர் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சு பொறுப்புகளை வகித்த அவர், 2001 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கி இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஜனாதிபதியின் பிறந்த தினமான இன்று உலகத் தலைவர்களும் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM