சவூதி அரே­பி­யா­வா­னது வளை­குடா பிராந்­தி­யத்­தி­லுள்ள தனது எதி­ரா­ளி­யான கட்­டாரை ஒரு தீவாக மாற்றும் வகையில் அந்­நாட்­டிற்கும் தனது நாட்­டிற்­கு­மி­டையில் பாரிய கால்­வா­யொன்றைத் தோண்டத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கட்டார் தீவி­ர­வா­தத்­திற்கு உதவி வரு­வ­தாகத் தெரி­வித்து அந்­நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர மற்றும் வர்த்­தக  உற­வு­களை  சவூதி  அரே­பியா கடந்த வருடம் துண்­டித்­த­தை­ய­டுத்து  இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான  பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது.

இந் ­நி­லையில் சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர்  மொஹமட் சல்­மானின்  சிரேஷ்ட ஆலோ­ச­க­ரான  சவுத் அல் கஹ்­தானி,   சவூதி அரே­பி­யா­வுக்கும் கட்­டா­ருக்­கு­மி­டை­யி­லான நில ரீதி­யான இணைப்பைத் துண்­டிக்கும் வகையில் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பாரிய கால்­வா­யொன்றைத் தோண்­டு­வ­தற்­காக உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள  சல்வா தீவு  திட்டம் குறித்து  டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால்  வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­தியில்  உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

சல்வா தீவு திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான விப­ரங்­க­ளுக்­காக தாம்  பெரும் எதிர்­பார்ப்­புடன் காத்­தி­ருப்­ப­தா­கவும் அந்த மாபெரும்  வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க திட்டம்  பிராந்­தி­யத்தின்  பூகோள ரீதி­யான தரைத்­தோற்ற அமைப்­பையே மாற்­று­வ­தாக அமையும் எனவும் அவர் கூறினார்.

 580   மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான செலவில்  ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள  மேற்­படி கால்வாய் 60  மைல் நீளமும் 200  மீற்றர் அக­லமும் கொண்­ட­தாக  அமையும் என அவர்  மேலும் தெரி­வித்தார்.

அந்தக் கால்­வாயின் ஒரு பகு­தியை  அணு­சக்தி கழிவை சேமிப்­ப­தற்­கான நிலை­யத்­திற்கு ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக அவர் கூறினார்.

இந்­நி­லையில் மேற்­படி திட்­டத்தை முன்­னெ­டுக்க  கால்­வாய்­களைத் தோண்­டு­வதில் நிபு­ணத்­து­வத்தைக் கொண்­டுள்ள  பெயர் வெளி­யி­டப்­ப­டாத 5  கம்­ப­னி­க­ளுக்கு  அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  அந்தக் கம்­ப­னியில்  ஒப்­பந்­தத்தைப் பெற்றுக் கொள்ளும் கம்­பனி தொடர்பில்  இந்த செப்­டெம்பர் மாதம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கடந்த ஜூன் மாதம் பிராந்­திய பத்­தி­ரி­கைகள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில்  மேற்­படி டுவிட்டர் செய்தி குறித்து சவூதி அரே­பிய அதி­கா­ரி­களோ அன்றி கட்டார் அர­சாங்­கமோ    விமர்­சனம் எத­னையும்  இது­வரை வெளி­யி­ட­வில்லை.