பஹியங்கல மலைக்குகை விஹாரைக்கு S-lon இனால் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டம் 

Published By: Priyatharshan

08 Mar, 2016 | 01:48 PM
image

இலங்கையில் நீர் முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் தேர்மோபிளாஸ்டிக் குழாய்கள் விற்பனையில் சந்தை முன்னோடியாக திகழும் S-lon லங்கா (பிரைவட்) லிமிடெட், தமது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களில் ஒரு அங்கமாக, பல்வேறு சூழல் மற்றும் சமூக செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கியதன் ஊடாக, பெருமளவான இலங்கையர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்கின்றது.

தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ளு-டழn லங்கா, வரலாற்றுச் சிறப்பு மிக்க பஹியங்கல மலைக்குகை விஹாரைக்கு விஜயம் செய்யும் பெருமளவான பக்தர்கள் மற்றும் குருமார்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருந்துப்பொருட்களுக்கான அமைச்சர் ராஜித சேனாரட்ன பங்கேற்றிருந்தார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுமதி தினத்தன்று இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த குடிநீர் திட்டத்தை கெப்பிட்டல் மஹாராஜா ஓர்கனைசேஷன் லிமிட்டெட்டின் குழுமப் பணிப்பாளர் திரு. எஸ்.சி.வீரசேகர முன்னெடுத்திருந்ததோடு, இவரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருந்தது. 

பஹியங்கல மலைக்குகை விஹாரை, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேசத்தில் அமைந்துள்ளது. 

இது இலங்கையின் மிகப்பெரிய மலைக்குகையாக கருதப்படுவது மட்டுமல்லாமல், ஆசியாவில் இனங்காணப்பட்டுள்ள இயற்கையாக தோன்றிய மாபெரும் குன்றுகளில்  ஒன்றாகவும் கருதப்படுகிறது. 

விஹாரையின் பிரதம மதகுருவான சங்கைக்குரிய பஹியங்கல சந்திம தேரர், ளு-டழn லங்கா முன்னெடுத்திருந்த இந்த செயற்திட்டத்தை பாராட்டியிருந்ததுடன், நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்புக்காக நன்றி தெரிவித்திருந்தார். அத்துடன் விஹாரையைச் சேர்ந்த 50 பிக்குமாருக்கு குடிநீரை பெற்றுக் கொள்ளவும், போயா தினங்களில் இந்த விஹாரைக்கு மலையேறி விஜயம் செய்யும் பெருமளவான பக்தர்களுக்கும் குடிநீரை பெற்றுக் கொள்ள இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகவும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வை ளு-டழn லங்கா (பிரைவட்) லிமிட்டெட் நீர்குழாய் பொருத்துநர் கழகம் மற்றும் பொருட்கள் அபிவிருத்தி முகாமையாளர் ஷிராஸ் மொஹமட், S-lonநீர்குழாய் பொருத்துநர் கழகத்தின் அங்கத்தவர்களின் உதவியோடு ஒழுங்கமைப்பு செய்திருந்தார். 

இந்த அணி, குறுகிய காலப்பகுதியில் இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருந்தது. இந்த செயற்திட்டம் தொடர்பில் திரு. ஷிராஸ் மொஹமட் காண்பித்த அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு தொடர்பில் சங்கைக்குரிய பஹியங்கல சந்திம தேரர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த செயற்பாடு சமூகத்தின் சமய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பெரும் சேவையாக அமைந்திருந்தது எனவும் குறிப்பிட்டார்.

இந்த செயற்திட்டத்தின் மேறபார்வை நடவடிக்கைகளை கெப்பிட்டல் மஹாராஜா ஓர்கனைசேஷன் லிமிட்டெட்டின் குழுமப் பணிப்பாளர் திரு. எஸ்.சி.வீரசேகர முன்னெடுத்திருந்தார். 

சமய மற்றும் சமூக ஒன்றிணைவை ஏற்படுத்தியிருந்தமைக்காக இந்த செயற்திட்டத்துக்கு பெருமளவு வரவேற்பும் வாழ்த்துக்களும் கிடைத்திருந்தன. தன்னார்வ அடிப்படையில் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் பெருமளவானோர் பௌத்தர்கள் அல்லாதவர்கள் என்பதுடன், அவர்கள் பெரும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் திட்டமிடல் முதல் நிர்மாணம் வரையான சகல செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக நாடு முழுவதிலும் S-lon லங்கா பிரைவட் லிமிட்டெட் இது போன்ற பல சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. தியசர மாணவர் வட்டம், S-lon நீர்குழாய் பொருத்துநர் கழகம், தெனமுது சாயனய, பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு நீர் விநியோக கட்டமைப்புகளை நிர்மாணித்தல், நீர் குழாய் பொருத்துநர்களுக்கு பயிற்சிகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக S-lonநிறுவனம், நுகர்வோர், நிர்மாணத்துறை, நீர்குழாய் பொருத்தும் நிபுணர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு பக்கபலமாக செயற்படுகிறது. 

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் S-lonலங்கா (பிரைவட்) லிமிட்டெட்டின் விற்பனை பணிப்பாளர் திரு. ரஞ்சன் லியனகே, வணிக அபிவிருத்தி மற்றும் விற்பனை சந்தைப்படுத்தல் முகாமையாளர் திருமதி. ஷலினி நவரட்ன மற்றும் S-lonலங்கா (பிரைவட்) லிமிட்டெட் ஊழியர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த செயற்திட்டம் தொடர்பில் திருமதி. ஷலினி நவரட்ன கருத்து தெரிவிக்கையில், 

“எமது பெறுமதி கட்டமைப்பில் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் என்பது உள்ளடங்கியுள்ளது. எமது பாரம்பரியத்தில் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 

மேலும், எமது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள், தேசிய மட்டத்தில் பொருத்தமானவையாகவும், அனுகூலம் பெறுவோர் மத்தியில் நீடித்த தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. S-lon க்கு  “நீர் என்பது வாழ்க்கை” ஆகும். எனவே, நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் நீர் வளத்தை கிடைக்கச் செய்ய வாய்ப்பு கிடைத்ததை ஒரு சிறந்த பேறாக கருதுகிறோம்” என்றார்.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வர்த்தக நாமத்தெரிவுகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நடவடிக்கைகளை S-lon முன்னெடுக்கிறது. இதில் நீர் குழாய்கள் மற்றும் பொருத்திகள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் வெளியேறும் குழாய்கள் மற்றும் பொருத்திகள், கொதிநீர் குழாய் கட்டமைப்பு, குரோம் பூசப்பட்ட ஃபோசட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், போல் வால்வ் தெரிவுகள், தோட்ட மெஷ் (சல்லடைக் கம்பிகள்) மற்றும் உதிரிப்பாகங்கள், சோல்வன்ட் சீமெந்து மற்றும் நீர் பம்பிகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58