இந்திய அணியுடனான நான்காவது டெஸ்டில் வெற்றிபெற்றதே அணித்தலைவர் காலத்தில் நான் பெற்ற மிகவும் இனிப்பான வெற்றியாகும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
அணித்தலைவராக பணியாற்றிய காலத்தில் நீங்கள் பெற்ற சிறப்பான வெற்றியிதுவா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி மிகவும் ருசிகரமானதாக காணப்பட்டது பல விடயங்களை என்னால் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குழுவாக நாங்கள் மிகச்சிறப்பாக விளையாடினோம் என நினைக்கின்றேன்,அழுத்தமான சூழ்நிலை நிலவிய தருணங்களில் அதனை வெற்றிக்கொள்ள முடிந்ததும் மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொயீன் அலி மிகவும் அற்புதமாக பந்து வீசினார் எனவும் குறிப்பிட்டுள்ள ஜோ ரூட் சிலவேளைகளில் போட்டிகளில் விளையாடாமல் சில நாட்கள் விலகியிருப்பது கூட சிறந்த விடயம்தான் எனவும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக அவர் மிகச்சிறப்பாக பந்துவீசிய தருணம் இதுவென குறிப்பிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ,
சாம் கரான் இந்த போட்டியில் மாத்திரமல்ல தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார், இளம் வீரர் ஒருவர் இவ்வளவு தாக்கம் செலுத்துவது மிகவும் சிறப்பான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM