(இராஜதுரை ஹஷான்)

குடும்ப ஆட்சியினை மீண்டும் உருவாக்குவதற்காகவே பொது எதிரணியினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர் என ஐக்கிய தேசியக்  கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை அனைவருக்கும் வழங்கியுள்ளதாகவும் போராட்டத்தின் போது  பொது மக்களுக்கு  இடையூறு விளைவித்து பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

மேலும் போராட்டங்களின் பொழுது  பாடசாலைகள் மூடப்படும் என  எதிர்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பாடசாலை உள்ள பாதைகளில் போராட்டங்களில் ஈடுப்படும்போது  மாணவர்களின் கற்றல்  நடவடிக்கைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில்  செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது வேண்டிய விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.