கண்டி, கலஹா வைத்தியசாலையில் அமைதியீன்மையை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 07 பேரையும் எதிர்வருவும் 06 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

கடந்த 28 ஆம் திகதி கலஹா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அப் பகுதி மக்கள் வைத்தியாலையின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதுடன வைத்தியசாலையின் மீது தாக்குதலை நடத்தி உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேரை நேற்றைய தினம் கைதுசெய்தனர்.

இவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.