சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள முக்கிய விமானதளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்ற அதேவேளை சிரியா இதனை நிராகரித்துள்ளது.

சிரிய தலைநகரில் உள்ள மெசே விமானநிலையத்தின் மீது இஸ்ரேல் இரண்டு ஏவுகணை  தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என சிரியாவின்மனித உரிமை நிலவரங்களை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலான் குன்றுகளில் இருந்து இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவின் புலனாய்வு அமைப்பின் தளமாக இந்த விமானநிலையம் இயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் சிரியாவின்  ஊடகங்கள் இதனை நிராகரித்துள்ளன.

ஆயுதகிடங்கில் இடம்பெற்ற விபத்துகாரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக சிரியாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.