இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்தின் இரண்டாது இனிங்சில்  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்து வீச்சு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை துடுப்பாட்ட வீரர் புஜாரா அதனை நிராகரித்துள்ளார்.

இரண்டாவது இனிங்சில் 35 ஓவர்கள் பந்து வீசிய அஸ்வின் ஒரு விக்கெட்டிளை மாத்திரம் வீழ்த்தியுள்ளார்

அஸ்வின் பந்து வீச்சு குறித்து உடனடி விமர்சனங்கள்  எழுந்துள்ளன.

எனினும் புஜாரா அஸ்வின் பந்து வீசிய விதத்தை பாராட்டியுள்ளார்.

அஸ்வின் மோசமாக பந்து வீசவில்லை என நான் கருதுகின்றேன் அவர் விக்கெட்களை வீசவில்லை ஆனால் பந்துகளை சரியான இடத்தில் வீசிக்கொண்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களில் நீங்கள் சிறப்பாக பந்து வீசினாலும் விக்கெட்களை வீழ்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் மிகவும் புத்திசாலியான பந்துவீச்சார் அவர் வெளிநாடுகளில் எங்களுக்காக சிறப்பாக பந்து வீசியுள்ளார் இதன் காரணமாக அவர் மோசமாக பந்துவீசவில்லை எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

ஆடுகளம் மெதுவானதாக மாறியுள்ளது இதன் காரணமாகவே அஸ்வினின் சில பந்துகள் எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை குறிப்பாக மொயீன் அலியை இந்திய அணியினர் எவ்வாறு விளையாடுகின்றனர் என்பதே இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்கும் எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆடுகளத்தை பார்க்கும்போது அதன் வேகம் குறைந்துள்ளமை புலனாகின்றது டெஸ்ட்; போட்டியின் கடைசி இரண்டு நாட்களில் வேகம் குறையும் ஆடுகளங்களில் நாங்கள் விளையாடியுள்ளோம் எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்

பந்து மேலெழும்பாத மிகக்குறைந்த உயரத்தில் வரும் ஆடுகளங்களில் இந்தியாவில் நாங்கள் விளையாடியுள்ளோம் இதன் காரணமாக அது எங்களிற்கு சாதகமானதாக அமையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.