உலக மகளிர் தினத்தை வேண்­டு­மானால் நாம் எளி­மை­யாகக் கொண்­டா­டலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்­டா­டு­வ­தற்கு கார­ண­மான போராட்­ட­மு­ம் அதன் வெற்­றி­களும் அவ்­வ­ளவு எளி­தாகக் கிட்­டி­ய­தல்ல. ஆணா­திக்க சமு­தா­யத்­தி­லி­ருந்து பெண்­க­ளுக்­கான உரி­மை­களை வென்­றெ­டுத்த நாள் இது.

18ஆ-ம் நூற்­றாண்டில் தொழிற்­சா­லைகள் மற்றும் அலு­வ­ல­கங்­களில் ஆண்கள் மட்­டுமே பணி­யாற்­றினர். மகளிர் வீட்டு வேலை­களைச் செய்யும் பொருட்டு வீடு­களில் முடக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்­கப்­பட்­டது. மருத்­து­வமும் சுதந்­தி­ரமும் என்­ன­வென்று கண்ணில் காட்­டப்­ப­டாமல் இருந்த காலம் அது.

இந்த நிலை­யில்தான் 1857ஆ-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏரா­ள­மான ஆண்கள் கொல்­லப்­பட்­டதும் படு­கா­ய­ம­டைந்து நட க்கமுடி­யாத நிலைக்கு உள்­ளா­னதும் நிகழ்ந்­தது. இதனால் உலகின் பல நாடு­களில் தொழி­லா­ளர்கள் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது. இதனைத் தவிர்க்க நிலக்­க­ரிச்­சு­ரங்கங்கள் மற்றும் தொழிற்­சா­லைகள், நிறு­வ­னங்­களில் மக­ளி­ருக்கு பணி வாய்ப்பு கிட்டியது. இந்த சந்­தர்ப்­பம்தான் அடுப்­பூதும் பெண்­களால் தொழிற்­சா­லை­க­ளிலும் திற­மை­யாக பணி­யாற்ற முடியும் என்­பதை உலகுக்கு நிரூ­பித்­தது. ஆண்­க­ளுக்கு நிக­ராக பெண்­க­ளாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமு­தா­யமே அப்­போ­துதான் புரிந்துகொண்­டது.

எது எப்­படியிருந்­தா­லும், வேலை பார்க் கும் இடங்­களில் ஆண்­க­ளுக்கு நிக­ராக பணி­யாற்ற வாய்ப்புக் கிடைத்­ததே தவிர ஊதி­யத்தில் பெண்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டது. (அது இன்றுவரை பல இடங்­களில் தொடர்வது மற்­றொரு பிரச்­சினை). இதனால் பெண்கள் மனக்குமு­றினர். ஆண்­க­ளுக்கு இணை­யான ஊதி­யம், உரி­மைகள் கோரி பெண்கள் எழுப்­பிய குர­லுக்கு அப்­போ­தைய அமெ­ரிக்க அரசு செவி­சாய்க்­க­வில்லை.

அமெ­ரிக்­காவின் தொழிற்­பு­ரட்சி நகர் நியூ யோர்க் இங்கு நெசவுத்தொழிலில் பெரு­ம­ளவு பெண்கள் ஈடு­பட்­டி­ருந்­தனர். இவர்கள் பதி­னாறு மணி­நேரம் வேலை செய்து மிகக் குறை­வான ஊதி­யத்தைப் பெற்­றனர். அந்த ஊதி­யத்தைப் பெறு­வ­தற்குக் கூட நிர்­வா­கத்தில் உள்­ள­வர்­களின் உடற்­ப­சிக்கு இணங்­கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்­தது.

1857-இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்­பினர். பெண்­களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்­கி­ய பொன்னாள்! தொடர்ந்து போராட்­டங்­கள், பெண்கள் அமைப்­புக்கள் தோன்­றின.

இதனால் அமெ­ரிக்கா முழு­வதும் கிளர்ந்­தெ­ழுந்த பெண் தொழி­லா­ளர்கள் 1857ஆ-ம் ஆண்டு மார்ச் 8ஆ-ம் திகதி போராட்­டத்தில் குதித்­தனர். துணி­களை உற்­பத்திசெய்யும் ஆலை­களில் பணி­யாற்­றிய பெண்கள் தான் இப்­போ­ராட்­டத்­திற்கு தலைமை ஏற்­றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆலை உரிமை­யா­ளர்கள் இப்­போ­ராட்­டத்தை அரசின் ஆத­ர­வுடன் அடக்­கினர். வெற்றிபெற்­ற­தாக பகல் கனவும் கண்­டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்­க­ளுக்கு நிலைக்­க­வில்லை.

அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத்தனம் என்று பெண் தொழி­லா­ ளர்கள் 1907ஆ-ம் ஆண்டில் மீண்டும் போரா ட்ட களத்தில் குதித்து சம உரிமை, சம ஊதியம் கோரினர். இதைத்தொடர்ந்து டென் மார்க் நாட்டில் உள்ள கோபன்­ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடை­பெற்­றது. இதில் உல கின் பல நாடு­களைச் சேர்ந்த பெண்­களின் அமைப்­புக்கள் கலந்துக்கொண்டு தங்­க­ளது ஒற்­று­மையை உல­குக்கு காட்­டின.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜேர்­மனி நாட்டின் கம்­யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்­கி­னே, ஒரு கோரிக்கை தீர்­மா­னத்தை வலி­யு­றுத்தி சிறப்­புரை ஆற்­றினர். அந்த தீர்­மா­னத்தின் முக்­கிய சாராம்­ச­மாக மார்ச் மாதம் 8-ஆம் திகதியை மகளிர் தின­மாக கொண்­டாட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். பெண்­களை அடக்கியாள நினைத்த ஆண் சமு­தாயம் இதற்கு ஒப்புக்கொள்­ளுமா அல்­லது இந்த தீர்­மானம் நிறை­வேற வழி ஏற்­ப­டுத்­துமா... பல்­வேறு தடங்­கல்­களால் இந்த தீர்­மானம் நிறை­வேற முடி­யாமல் போனது.

இதற்­கி­டையே பெண் தொழி­லா­ளர் அமைப்­பினர் ஆங்­காங்கே உரிமைக்குரல் எழுப்பத் தொடங்­கி­யி­ருந்­தனர். 1920-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்­யாவில் செயின்ட் பீட் டர்ஸ் நகரில் நடந்த பெண்­களின் போராட்­டத்தில் ரஷ்­யாவைச் சேர்ந்த அலெக்ஸ்­சாண் ட்ரா கெலன்ரா கலந்துகொண்டார்.

அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ஆம் திகதி நடத்த வேண்டும் என்று பிர­க­டனம் செய்தார். இதை­ய­டுத்து உலக மகளிர் தினத்தைக் கொண்­டாடத் தொடங்­கினர். அன்று முதல் இன்று வரை ஒவ்­வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் திகதியை நாம் மகளிர் தின­மாகக் கொண்­டாடி வரு­கிறோம்.

மார்ச் 8ஆ-ம் திகதியை உலக மகளிர் தின­மாக நாம் கொண்­டாடி வரு­கிறோம். வீட்­டுக்குள்ளே இருந்த பெண் சமு­தாயம் தற்­போது வானில் பறந்துகொண்­டி­ருக்­கி­றது என்றால் அதற்கு வித்­திட்ட பல்­வேறு போராட்­டங்­களின் வெற்றி தினமே இந்த மகளிர் தின­மாகும். முதலில் அனைத்து மக­ளி­ருக்கும் கூடலின் சார்பில் மகளிர் தின நல்­வாழ்த்­து­களை தெரி­வித்துக் கொள்­கிறோம்.மார்ச் 8-இல் சர்­வ­தேச மகளிர் தினம் கொண்­டா­டு­வது ஏன்?

மக­ளி­ருக்கும் என்ன சம்­பந்தம் என்று உழைக்கும் கீழ்த்­தட்டுப் பெண் வர்க்­கமே அறிந்து கொள்­ளாத தின­மா­கத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்­கி­றது.சர்­வ­தேச மகளிர் தினம் என்று ஒருநாள் வரு­வ­தற்குக் கார­ணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்­பது தங்­க­முலாம் பூசப்­ப­டாத உண்மை!

உலக மகளிர் தினம் உரு­வான பின்­ன­ணியை சற்று பார்த்தால் இப்­போ­துதான் அவர்கள் சிந்­திக்கத் துவங்­கி­யி­ருக்­கி­றார்கள் என்று எண்ணத் தோன்­று­கி­றது. பெண் அடி­மைத்­தனம் எங்கு இருக்­கி­ன்­றதோ அங்­குதான் பெண் சுதந்­திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்­ப­டு­கி­றது. பெண்கள் முன்­ னேற்றம் மற்றும் சம­ உ­ரிமைமைய­கமாக வைத்து கி.பி. 1909இ-ல் அமெ­ரிக்க சோஷ லிஸ்ட் கட்­சி­யினர் முதல் முத­லாக மகளிர் தினத்தை பெப்­ர­வரி மாதம் 28ஆம் திகதி கொண்­டா­டினர்.

மேற்­கத்­திய நாடுகள் உல­க­றிய தாங்­கள்தான் பெண்கள் முன்­னேற்­றத்­திற்­காக பாடு­ப­டு­கிறோம் என்­கி­றார்கள். மகளிர் அமைப்­புகள் பெண்கள் சம­ உ­ரி­மைக்­காக போர்க்­கொடி ஏந்தி போராடி வரு­கி­றார்கள். இத்­த­கைய நிகழ்­வு­க­ளா­லும், போராட்­டங்­ க­ளா­லும், மகளிர் அமைப்­பு­க்களின் செயல்­க­ளாலும் பெண்­ச­மு­தாயம் முன்­னேற்­ற­ம­டைந்­து­விட்­டதா? பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள் குறைந்­தி­ருக்­கின்­ற­னவா? என்றால் இல்லை என்றே கூறலாம்.

குடும்பத் தேவை­களை பூர்த்திசெய்­வதில் ஆண்­க­ளுக்கு சற்று அதி­க­மான கடமை இருப்­பது போன்று இல்­லற வாழ்க்­கையில் பெண்கள் ஆண்­க­ளை­விட சற்று அதி­க­மான பொறுப்­பு­களை ஏற்­றா­க­வேண்­டி­யது நியதி. குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்­கெ­டுத்­துக்­கொள்­வது பெண்கள்தான். ஒவ்­வொரு ஆணின் வெற்­றிக்­குப்பின் ஓர் பெண் இருக்­கிறாள் தாய­க­வோ, மனை­வி­யா­கவோ அல்­லது சகோ­த­ரி­யா­கவோ அல்­லது மக­ளா­கவோ.

சம­ உ­ரிமை பேசும் மேற்­கத்­திய நாடு­க ளில் பெண்­ எ­ழுச்சி ஏற்­பட்­டதன் விளைவு கருப்பைச் சுதந்­திரம் அதி­க­மாகி இல்­லறம் என்ற முறை தகர்க்­கப்­ப­டு­கி­றது. இதனால் குழந்­தைகள் காப்­ப­கங்கள் அதி­க­ரிக்­கின்­றன. குழந்­தை­களை பெற்­றெ­டுத்த ஒரு வரு­டத்­திற்குள் குழந்­தைகளை காப்­ப­கத் தில் சேர்த்­து­வி­டு­கி­றார்கள். பெற்­றோர்­க ளின் பாசம், பரி­வு, அன்­பு, அர­வ­ணைப்பு கிடைக்­காமல் குழந்­தைகள் வளர்­கின்­றன. பின்­வி­ளைவு முதியோர் காப்­ப­கங்­களும் மேற்­கத்­திய நாடு­களில் அதி­க­மாக உரு­வா­கின்­றன. இந்த நிலை மேற்­கத்­திய நாடு­க ளில் மட்டும் என்­றில்லை. அதன் சாயலை நம் நாடு­க­ளிலும் காணலாம். இவர்­களின் இவ்­வா­றான முன்­னேற்றம் நமக்குத் தேவை­யில்லை.

கிளர்ச்­சிகள் என்றால் அதன் தீவிரம் புரி­வ­த ற்கு அடுப்­பூதும் பெண்கள் இடுப்­பொ­டியப் பாடு­படும் பெண்கள் கையில் கிடைத்த ஆயு­தங்­களைக் கையில் எடுத்­துக்­கொண்டு பாரிஸ் நகரத் தெருக்­களில் அணிதிரண்­ட னர்.

புய­லாகக் கிளம்­பிய பூவை­யரை துரும்­பாக எண்­ணிய அந்­நாட்டு அரசன் இடி­யென முழங்கி 'இவர்­களை என் அதி­காரம் கொண்டு அடக்­குவேன் என்றும்' ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டு­வோரைக் கைதுசெய்வேன் எனவும் அறி­வித்தான்.

ஆயி­ரக்­க­ணக்­கான பெண்கள் கூட்டம்! அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக ஆண்­களும் ஆயி­ரக்­க­ணக்கில் கலந்துகொள்ள உற்­சாகம் கரை­பு­ரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்­வலம் கொட்டும் மழையில் ஊர்ந்துென்­றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட அனை­வ­ரையும் கைதுசெய்வோம் என்று மிரட்­டிய அர­சனின் மெய்க்­காப்­பா ளர்கள் இரு­வ­ரையும் திடீ­ரென கூட்­டத்­தினர் பாய்ந்து தாக்கிக் கொன்­றனர்.

இதை எதிர்­பா­ராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்­கை­களை கண்­டிப்­பாக பரி­சீ­லிப்பேன். உங்­க­ளுக்கு சாத­க­மாக அறி­விப்பேன் என்று ஆர்ப்­பாட்­டத்தில் கொதித்­தெ­ழுந்­த­வர்­களைச் சமா­தானப்படுத்­தினான். இய­லாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடி­து­றந்தான். இந்தச் செய்தி ஐரோப்­பிய நாடு­களில் வேக­மாகப் பர­விட அங்கும் பெண்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்­ரடா தலை­மையில் ஜேர்­மனி, ஆஸ்­தி­ரி­யா­ டென்மார்க் நாடு­களைச் சேர்ந்த பெண் பிர­தி­நி­திகள் கலந்­து ­கொண்டு தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக் கத் தொடங்­கி­யது.

இத்­தா­லி­யிலும் பெண்கள் இதுதான் சம யம் என்று தங்­க­ளது நீண்­டநாள் கோரிக்­கை­யான வாக்­கு­ரி­மையைக் கேட்டு ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கினர்.

பிரான்ஸில் புருஸ்­ஸி­யனில் இரண்­டா­வது குடி­ய­ரசை நிறு­விய லூயிஸ் பிளாங்க் பெண்­களை அர­சவை ஆலோ­சனைக் குழுக்­களில் இடம்­பெறச் செய்­யவும் பெண்­க­ளுக்கு வாக்­ கு­ரிமை அளிக்­கவும் ஒப்­புதல் தந்தான். அந்த நாள் 1848-ஆம் ஆண்டு மார்ச் 8ஆ-ம் நாளா கும்! அந்த மார்ச் 8ஆ-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

இன்று மகளிர் தினம். 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற பாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில் இன் றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன் னேறி மங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள்.

ஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும் பெண்களுக்கு நடக்கும் கொடுமை கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் பெண் குழந்தைகளைக் கொல் லும் அவலம் இருந்து கொண்டுதான் இருக் கிறது.

21 ஆம் நூற்றாண்டு பெண் சுதந்திரம் பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருந்தாலும் தங்க ளுக்கான அடிப் படை உரிமைகள் கூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இரு க்கின்றனர்.