பதுளை - ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளைப் பகுதியின் தீகல்ல என்ற இடத்தைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய சந்திமா பிரியதர்சினி சந்திரசேகரன் என்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்ளே நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தவராவார்.

இப் பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்ளாக இணைந்து, கொழும்பு வலான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவராவார்.

இப் பெண் பொலிஸ் சேவையின் இணையும் முன் ஐந்து வருடங்களுக்கு மேலாக பதுளைப் பகுதியின் ஊவா, கட்டவளை பெருந்தோட்டத்தில் களமேற்பார்வையாளரான துசித்த நந்தன என்ற 24 வயதுடைய காதல் கொண்டிருந்தார்.

துசித்த நந்தன என்ற இவ் இளைஞன் தனது காதலியிடம் பொலிஸ் சேவையிலிருந்து விலகி விடும்படி விடுத்த கோரிக்கையினை காதலி மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து மேற்படி சம்பவம் இடம்பெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ள ஹாலிஎல பொலிஸார் இவரிடம் மேலதிக 

உயிரிழந்த பெண்ணின் சடலம் சட்ட பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை அரசினர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.