பட்லரின் துணையுடன் 260 ஓட்டங்களுடன் இங்கிலாந்து

Published By: Vishnu

02 Sep, 2018 | 12:17 PM
image

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 91.5 ஓவர்களுக்கு எட்டு விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

சவுத்தாம்டனில் இடம்பெற்று வரும் இந்த போட்டித் தொடரானது கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமானது இதில் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களை பறிகொடுதது 246 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இந்திய இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பாக சாம் குர்ரன் 78 ஓட்டங்களையும் மெய்ன் அலி 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுக்களையும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி புஜாராவின் அசத்தலான ஆட்டத்தினால் 84.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய புஜாரா 132 ஓட்டங்களையும் அணித் தலைவர் விராட் கோலி 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி ஐந்து விக்கெட்டுக்களையும் புரோட் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களம்புகுந்தது. 

அதற்கிணங்க இந்திய அணியின் பந்து வீச்சுக்களுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து ஆடுகளம் விட்டு நீங்கினார். 

அதன்படி குக் 12 ஓட்டத்துடனும் ஜென்னிங்ஸ் 36 ஓட்டத்துடனும் மெய்ன் அலி 9 ஓட்டத்துடனும் அணித் தலைவர் ரூட் 48 ஓட்டத்துடனும் ஜோனி பிரிஸ்டோ எதுவித ஒட்டம் எதையும் பெறாது டக்கவுட் முறையிலும் பென் ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அதன் பின்னர் ஜோஸ் பட்லர் மத்திரம் நிதானமாவும் பொறுப்புடனும் ஆடி அரை சதம் கடந்து, 69 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பட்லரின் துணையுடன் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து சற்று மீண்டெழுந்தது. 

அடுத்ததாக ரஷித் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டியின் மூன்றம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அதன்படி இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 260 பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 233 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. சாம் குர்ரன் 37 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தார்.

பந்து வீச்சில் இந்தியா சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்க்களையும் கைப்பற்றியுள்ளனர். 

இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43