பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட  நிதியை இரத்து செய்யவுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியையே இரத்து செய்துள்ள அமெரிக்கா, ஆப்கான், தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் தவறிவிட்டதாக கூறியே இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனினும் அமெரிக்க இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸின் அனுதியை பெற வேண்டியது அவசியமாகும்.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கானை சந்திப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ பகிஸ்தானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.