நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வறட்சி காரணமாக நாடு முழுவதும் நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இடர் முகாமைத்துவ நிலையம், வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதற்கான புள்ளி விபரங்கள் இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக இடர் நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகங்களை பவுசர்கள் மூலம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.