நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகளவான வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதிகளவான வெப்பமான காலநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைவாக நேற்றைய தினம் பொத்துவில் பகுதியில் 37.1 பாகை செல்சியஸும், பொலன்னறுவை பகுதியில் 35.4 பாகை செல்சியஸும் வவுனியாவில் 34.9 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளது. 

அத்துடன் இக் அதிகளவான வெப்பத்துடன் கூடிய காலநிலையானது இம் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கும் என தெரிவித்த வணளிமண்டளவியல் திணைக்களம், இன்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும் அறிவித்துள்ளது. 

இதன்படி கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.

மேலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை பொருத்தவரையில் கிழக்கு கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மணித்தியாலயத்துக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.