வவுனியாவில் மாணவர்களின் சத்துணவுக்காக வழங்கப்பட்ட ரின் மீன் வியாபார நிலையங்களில் விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணவர்களின் சத்துணவுக்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு ரின் மீன் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ரின் மீன்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆனாலும் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பாடசாலைக்கு வழங்கப்பட்ட ரின் மீன்கள் விற்பனைக்காக வியாபார நிலையம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ரின் மீன் ஒன்று 100 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று குறித்த ரின் மீன்களை  பாடசாலையில் வேலை செய்யும் ஒருவருக்கு வழங்கியதாகவும், அவர் ஊடாக வியாபார நிலையத்தில் விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.