மர்மமான முறையில் உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ;  விசாரணை ஆரம்பம்

By Vishnu

02 Sep, 2018 | 08:31 AM
image

பதுளை - ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் பணிபுரியும் 23 வயதுடைய ஹாலிஎல கெட்டவெல ஜகுல்ல பகுதியை சேர்ந்த சந்திமா பியதர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த நேற்று பகல் நேரத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றையும் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அதன்பின்னே இவ்வாறு அவரது வீட்டில் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதோடு, பெரும் முயற்சிக்கு மத்தியில் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், குறித்த பெண் கான்ஸ்டபிள் குறித்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இந்த சம்பவத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப்...

2022-12-08 16:10:34
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07