இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டடை விலக்குவதற்கு சென்ற தாய் அதில் ஒருவரின் கத்துக்குத்துக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 78 வயதான சிங்கப்புர கோகந்தர பகுதியில் வசிக்கும் வலிமுனி கருணாவதி என்பவரே உயிரிழந்தவராவார். 

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், 

உயிரிழந்த கருணாவதியின் இளைய மகன் தன்னுடைய காணியை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும்போது அங்கு சில­ருடன் வந்த மூத்த மகன் இளைய மக­னுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டுள்ளார். இந்த வாக்­கு­வாதம் கைக­லப்பில் முடிந்­துள்­ளது. இதன்­போது இளைய மகன் கத்­தியால் குத்த முயற்­சித்த போது, இந்த சண்­டையை கரு­ணா­வதி விலக்க வந்­துள்ளார். இந்­த­நி­லையில் கரு­ணா­வ­தி­யையும் மூத்த மக­னையும் இளைய மகன் கத்­தியால் குத்­தி­யுள்ளார்.

இதன்­போது காய­ம­டைந்த இரு­வ­ரையும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­த­போதும் சிகிச்சை பல­னின்றி கரு­ணா­வதி உயி­ரி­ழந்­துள்ளார். இதே­வேளை காய­ம­டைந்த கரு­ணா­வ­தியின் மூத்­த­ம­கனும் இளைய மகனும் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தோடு இது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களை தலங்­கமை பொலிஸார் மேற்­கொண்­டு­வ­ரு­கின்றனர்.