வடக்கில் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து 6009.95 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன  என மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு வடக்கு அபி­வி­ருத்தி மற்றும் இந்து சமய கலா­சார அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார்.

மேலும் பிர­தான நக­ரங்­களில் உள்ள படை­யி­னரின் தலை­மை­ய­கங்­களை மாற்­று­வ­தற்கு 866.71மில்­லியன் ரூபா செல­விட்­டுள்­ள­தா­கவும்  அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்துடன் அண்மைக் காலங்­களில் காழ்ப்­பு­ணர்வு கொண்ட சில­ரினால் உண்­மைக்குப் புறம்­பான முறையில் எமது அமைச்சின் செயற்­பா­டுகள் விமர்­சிக்­கப்­ப­டு­கி­ன்றன.   

வீட­மைப்­பாக இருக்­கட்டும், சேத­ம­டைந்த வீடு­களைப் புன­ர­மைப்புச் செய்­வ­தாக இருக்­கட்டும், சுகா­தாரம், குடிநீர், மின்­சாரம், உட்­கட்­ட­மைப்பு அத்­துடன் அடிப்­படை வச­தி­க­ளாக இருக்­கட்டும் இவை­ய­னைத்தும் பல கோடி ரூபா நிதி­யீட்டில் கடந்த மூன்று வரு­டங்­களில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.