இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை அணியில் மீண்டும்  இணைக்கப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வருட காலமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத லசித் மலிங்க தற்போது இலங்கை அணியுடன் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள்  இடம் பெறவுள்ள நிலையில் இலங்கை  குழாமில் இணைக்கப்பட்ட லசித் மலிங்க ஆசிய கிண்ண போட்டிகளில் வியைாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் லசித் மலிங்க 35 ஆவது  பிறந்த தினத்தை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா?