ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமராவின் மகனும், நடிகர் ஜீனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கடந்த 29ஆம் திகதி வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹரிகிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஹரிகிருஷ்னாவின் உடலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

தாதிய ஊழியர்கள் எடுத்த செல்பிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் அனைத்து தரப்பினராலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந் நிலையில் செல்பி எடுத்த 2 வைத்திய உதவியாளர்கள் மற்றும் 2 தாதியர்களை வைத்தியசாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

பொலிஸார் குறித்த நால்வவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

விபத்தில் என்.டி. ஆரின் மகன் பலி!!