(ரொபட்  அன்­டனி)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது  கூட்டத் தொடர்  எதிர்­வரும்  10 ஆம் திகதி ஜெனி­வா­வில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் அடுத்த கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில்பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான முயற்­சிகள்   இந்தக் கூட்டத் தொட­ரி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கின்­றது. 

 ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் அல்­லது பிரிட்டன் இந்த   பிரே­ர­ணையை   2019ஆம் ஆண்டில் கொண்டு வ­ரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் அதற்­கான முயற்­சிகள்  இந்தக் கூட்டத் தொட­ரி­லேயே   இடம்­பெ­று­கின்­றன. 

 எதிர்­வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துடன் இலங்கை தொடர்­பான ஜெனிவா  பிரே­ர­ணையின் செயற்­பாட்­டுக்­காலம் முடி­வ­டை­கின்­றது.  இதன்­பின்னர்  இலங்­கை­யா­னது  பொறுப்­புக்­கூறல் முயற்­சியை   முன்­னெ­டுக்­க­வேண்­டு­மாயின் சர்­வ­தேச மேற்­பார்­வை­யுடன் கூடிய   பிரே­ரணை ஒன்று  முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். 

 அவ்­வாறு  ஒரு பிரே­ர­ணையை   2019ஆம்­ஆண்டு கொண்­டு­வ­ரு­வ­தற்கு தீவி­ர­மாக  தற்­போது முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது.  இம்­முறை  39ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்ள   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள்   மற்றும்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் ஆகியோர்  மற்­று­மொரு பிரே­ர­ணையை  ஐ.நா. மனித உரிமை  பேர­வையின் உறுப்பு நாடுகள் கொண்­டு­வ­ர­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்த உள்­ளனர். 

எனினும்  ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களோ, பிரிட்­டனோ இது­வரை இது­தொ­டர்பில் எந்த அறி­விப்­பையும் வெளி­யி­ட­வில்லை. கடந்த 2012,2013, 2014, 2015 ஆகிய ஆண்­டு­களில் இலங்கை தொடர்­பாக   நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களை  அமெ­ரிக்­காவே முன்­னின்று கொண்­டு­வந்­தது.  அதா­வது அமெ­ரிக்கத் தலை­மை­யி­லான   நாடு­களே இந்தப் பிரே­ர­ணை­களை கொண்­டு­வந்­தன. 

ஆனால் தற்­போது ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அமெ­ரிக்கா  அறி­வித்­துள்ள நிலையில் 2019ஆம் ஆண்டு பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்கு  அமெ­ரிக்கா முயற்­சிக்­குமா  என்­பது சந்­தேக்­கத்­துக்கு இட­மாக உள்­ளது. இந்த சூழ­லி­லேயே  ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் அல்­லது பிரிட்டன் இவ்­வாறு புதிய பிரே­ரணை ஒன்றை  ஐ.நா. மனித உரிமை பேர­வையில் தாக்கல் செய்­ய­வேண்­டு­மென  தமிழ் தரப்பு பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்­த­வுள்­ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு  கொண்­டு­வ­ரப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை  வழங்­கி­யி­ருந்­தது.  அதன்­படி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்­வரை அந்த பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த இலங்­கைக்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

ஆனால் அக்­கா­லப்­ப­கு­தியில் பிரே­ரணை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ரா­ததால்  2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவ­காசம் வழங்கும் நோக்கில்  2017ஆம் ஆண்டு மனித உரிமை பேர­வையில் 37 ஆவது கூட்டத் தொடரில்  மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. 2015ஆம்­ஆண்டு பிரே­ர­ணையின்  நீடிப்­பா­கவே இந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. 

அதன்­படி 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துடன் இந்தப் பிரே­ர­ணையின் செயற்­பாட்­டுக்­காலம் நிறை­வ­டை­கின்­றது.     அதன் பொருட்டே இம்­முறை  ஜெனி­வாவில் அடுத்த பிரே­ர­ணைக்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

இம்­முறை  ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் சர்­வ­தேச மனித  உரிமை அமைப்­புக்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­க­ளினால் பல்­வேறு உப­கு­ழுக்­கூட்­டங்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு   நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி இந்த  உப­கு­ழுக்­கூட்­டங்கள்   ஜெனிவா வளா­கத்தில் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.  

இந்­தக்­கூட்­டங்­களில் சர்­வ­தேச மனித உரிமை  செயற்­பாட்­டா­ளர்கள்   நாடு­களின் பிர­தி­நி­திகள்   இலங்கை பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொண்டு   உரை­யாற்­ற­வுள்­ளனர்.    இந்தக் கூட்­டங்­க­ளின்­போதே  புதிய  பிரே­ர­ணைக்­கான  நகர்­வுகள்  முன்­னெ­டுக்­கப்­படும் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  எதிர்­வரும்  செப்­டெம்பர் மாதம்   10 ஆம்­தி­கதி முதல் 28 ஆம்­தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள  நிலையில்   இலங்கை குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள  தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல்   தொடர்­பான   அறிக்கை தொடர்­பான விவாதம்   எதிர்­வரும் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில்  பதி­ல­ளிக்­கப்­படும். 

கடந்த வௌ்ளிக்­கி­ழமை   ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு இந்த அறிக்­கை­யா­னது   தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல்  குறித்து ஆராயும்  ஐக்­கி­ய­நா­டு­களின் செயற்­கு­ழு­வினால்   தாக்கல்   செய்­யப்­பட்­டது.  அதன்­படி   பல்­வேறு  பரிந்­து­ரைகள்   முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

இன்னும் சில தினங்­களில் உண்மை நீதி, இழப்­பீடு மற்றும் மீள் நிக­ழாமை   தொடர்­பான ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் இலங்கை குறித்த  அறிக்­கையும்  39/53.1  என்ற தலைப்பில்  மனித உரிமை பேர­வைக்கு சில தினங்­களில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட இந்த விசேட நிபு­ணரின் அறிக்கை  தொடர்பான  விவாதம் ஜெனிவாவில் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.     

இதேவேளை இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பலவந்தமாக காணாமலாக்கப்படுவது குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு   காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை கண்டறிவதற்காக  காணாமல் போனோரின் உறவுகள் நீண்டகாலம் காத்திருக்கின்றனர் என்பதனை இலங்கை அரசாங்கத்துக்கு  நினைவுப்படுத்த விரும்புகின்றோம். இந்த விடயத்தில்  சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய  அரசாங்கம் செயற்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது.