நேபாளம் - இலங்கை வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டு மாநாடு நேற்று பிற்பகல் கத்மண்டு நகரில் இடம்பெற்றது. 

இம்மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

நேபாள நாட்டின் மூலோபாய சமூக ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் நேபாள அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டின் அமைச்சர்களும், நிபுணர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேபாளத்தின் மூலோபாய சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.