கிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீதி கோரியும் கொலையாளிகளை கைது செய்ய கோரியும் முல்லைத்தீவு மாவட்டத்தில்  இன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது. 

முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா , வடமாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் , ஆ. புவனேஸ்வரன் , த.குருகுலராஜா , சு. பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

முல்லைத்தீவு முறிகண்டி வசந்தநகரை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணியான 32 வயதுடைய கருப்பையா நித்தியகலா எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து கடந்த 29 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.