பொருளாதார அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றிற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம் கூட விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரவித்த அவர்,

அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் கடினமான ஒரு வழிமுறையில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேளை அரசியல் தீர்வு கிடைத்த பின்னர் தான் நாங்கள் அபிவிருத்தியைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

பொருளாதார அபிவிருத்தி வேலைவாய்ப்புகள் என்கின்ற விடயத்தில் சில விடயங்களை நாம் அடைவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம் கூட விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

அண்மையில் ஜனாதிபதி நடத்தப்பட்ட செயலணிக் கூட்டத்தில் கூட  எமது தலைவர் இரா சம்பந்தன் இந்த விடயத்தை அழுத்தமாக கூறியிருந்தார்.

எனவே மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் நாங்கள் இந்த இரண்டு விடயத்தையும் அவதானமாக இருந்து ஒரு சமாந்தரமான நிலையில் கையாள வேண்டிய தேவைப்பாடிருக்கின்றது என்றார்.