(ஆர்.விதுஷா)

கடவத்தை, ஆம்ஸ்ரோங் சந்தியில் வைத்து சமிலா குமாரி எனும் பெண்ணை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 07 ஆம் திகதி கடவத்தை ஆம்ஸ்ரோங் சந்தியில் வைத்து 34 வயதுடைய சமிலா குமாரியை  மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொலை செய்தனர். அதனையடுத்து  விசாரணைகளை முன்னெடுத்த பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினர் ஒருவரை கைதுசெய்தனர்.

இந் நிலையிலேயே நேற்றுமுன்தினம் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும்  ஒருவரை பியகம பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்தனர்.

குறித்த சந்தேக நபர் மஹார நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் மேற்படி கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸர் மேற்கொணடு வருகின்றனர்.