(எம்.எம்.மின்ஹாஜ்)

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தின் செப்டெம்பர் மாதத்திற்கான முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் நான்காம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினத்தன்று வாய்மூல விடைக்கான வினா நேரம் முடிவடைந்தவுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் ஒழுங்குவிதிகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளன.